ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

🕔 March 29, 2021

கோட்டே மாநகர சபையின் உறுப்பினர் கே.ஜி தம்மிக சந்திரரத்னவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாநகர சபை உறுப்பினர் தம்மிக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, இன்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, செயலாளர் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்