இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா?

🕔 March 23, 2021

ண்ணெய் தாங்கி (Oil tanker) ஒன்றுக்குள் ஏறி நுழைந்த இலங்கையின் முதல் எரிசக்தி அமைச்சர் எனும் பெருமையை தான் பெற்றுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அறிக்கையின் படி, எண்ணெய் தாங்கியொன்றுக்குள் ஏறி நுழைந்த முதலாவது எரிசக்தி அமைச்சராக தான் வந்துள்ளதாகவும் அவரின் பேஸ்புக் பதிவில் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எண்ணெய் தாங்கியில் நேற்றைய தினம் அமைச்சர் உதய கம்மன்பில ஏறி நுழைந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்