‘கட்டாய தகனத்தை’ முடிவுக்கு கொண்டு வந்த பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு

🕔 February 10, 2021

கொவிட் பாதிப்பால் மரணமடைகின்றவர்களை அடக்கம் செய்வதற்கு பிரமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதிமதியளித்தமையை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி. டெப்லிற்ஸ் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்;

கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கட்டாயமாகத் தகனம் செய்வதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறோம்.

சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் திருத்தப்பட்ட நடைமுறையை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும்” என, அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சபையில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ; கொரேனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.

தொடர்பான செய்தி: கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்: மரிக்காரின் கேள்விக்கு பிரதமர் பதில்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்