சுமந்திரனுக்கான எஸ்.ரி.எஃப் பாதுகாப்பை நானே நீக்கினேன்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 February 9, 2021

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தானே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான நடைப் பயணப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்ட நிலையிலேயே, அவருக்கான மேற்படி பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தானே நீக்கியதாகக் கூறினார்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு விசேட அதிரடிப்படை (எஸ்.ரி.எஃப்) பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது. எனவே, அவருக்கு எஸ்.ரி.எஃவ். பாதுகாப்பு எதற்கு?” என்று அவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போன்று, சுமந்திரனுக்கும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தொடர்பான செய்தி: பொத்துவில் – பொலிகண்டி நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், நெருக்குவாரத்துக்கு உள்ளான மனோ, சுமந்திரன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்