புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம்

🕔 October 6, 2020

ட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் புதிய ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சராக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்

இன்று திங்கட்கிழமை காலை, ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

முன்னதாக இவர் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்