தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டோரில் கணிசமானோர் 50 வயதுக்கு குறைவானவர்கள்: 80 வயதுக்கு மேற்பட்டோர் மூவர்

நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் கணிசமானோர் 50 வயதுக்கு குறைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இம் முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 50 வயதுக்கு குறைந்தவர்கள் 87 பேர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டள்ளவர்களின் தகவல் தற்போது Online முறைமையில் நாடாளுமன்ற அதிகாரிகள் மூலம்  பெறப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்தவர்களுடைய விவரங்களின் அடிப்படையில்;

இதற்கமைய 30 வயதுக்கு குறைந்தவர்கள் 05 பேரும், 30 – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 21 பேரும், 40-50 வயதுக்கு உட்பட்டவர்கள் 60 பேரும், 50-60 வயதுக்கு உட்பட்டவர்கள் 54 பேரும், 60-70 வயதுக்கு உட்பட்டவர்கள் 37 பேரும், 70-80 வயதுக்கு உட்பட்டவர்கள் 09 பேரும் 80-90 வயதுக்கு உட்பட்டவர்கள் 03 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.