அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸின் ஊழல் மீண்டும் அம்பலம்: விலைமனுக் கோரல் மோசடி நிரூபணமானது

🕔 October 16, 2019

– அஹமட்-

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பமொன்றினை சமர்ப்பித்த ஊடகவியலாளர் ஒருவருக்கு, பொய்யான தகவலை வழங்கியமை மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவில் மேற்கொள்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணம் மற்றும் புனரமைப்பு வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கும் செயற்பாடொன்று அண்மையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

எவ்வாறாயினும், பகிரங்க விலைமனுக் கோரலின் ஊடகவே, குறித்த வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், பகிரங்க விலைமனு கோரப்பட்டதாக நாடகமாடிய அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள், மேற்படி வேலைகளை தமக்கு வேண்டிய ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, குறித்த வேலைகளுக்கு பகிரங்க விலைமனு கோரப்பட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விண்ணப்பமொன்றினைச் சமர்ப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்பத்துக்கு பதிலளித்திருந்த அங்குள்ள கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ் என்பவர், செப்டம்பர் 17ஆம் திகதியன்று தாம் பகிரங்க விலைமனுக் கோரலுக்கான எழுத்து மூல அறித்தலை காட்சிப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

குறித்த விலைமனுக் கோரருக்கான அறிவித்தல் பிரதிகளை அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை (முஸ்லிம்), கல்முனை (தமிழ்) பிரதேச செயலகங்களிலும், அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்திலும் காட்சிப்படுத்தியிருந்தாகவும் கணக்காளர் றிபாஸ் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் குறிப்பிட்டமை போல், தமது பிரதேச செயலகத்துக்கு அவ்வாறு எவ்வித அறிவித்தல் பிரதிகளும் வழங்கப்படவில்லை என்று, அக்கரைப்பற்று பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் தெரிவித்த தகவலின் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளும் பொருட்டு, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக மேற்படி ஊடகவியலாளர் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்துக்கான பதிலில், இவ்விடயம் அம்பலமானது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளரின் மேற்படி தகவல் பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில், பொத்துவில் பிரதேச செயலகமும் ஏற்கனவே தகவல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தரக்கது.

இதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்களைக் கோரியிருந்த தனக்கு, பொய்யான தகவல்களை வழங்கிய அட்டாளைச்சேனை பிதேச செயலக கணக்காளர் றிபாஸ் க்கு எதிராக, தவலறியும் உரிமை ஆணைக்குழுவில் மேற்படி ஊடகவியலாளர் மேன்முறையீடு செய்யவுள்ளார்.

தொடர்பான செய்தி:

01) தகவல் அறியும் உரிமைச் சட்டம்: பொய்யான தகவல் வழங்கும் உத்தியோகத்தருக்கு கிடைக்கும் தண்டனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

02) தகவல் அறியும் உரிமைச் சட்டம்: பொய்யான தகவல் வழங்கும் உத்தியோகத்தருக்கு கிடைக்கும் தண்டனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்