சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்

🕔 September 13, 2019

க்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐ.தே.க. பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைர் அமைச்சர் றிஷாட் பதியூதீன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர் மனோ கணசேன் ஆகியோருடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளை, சஜித் பிரேமதாஸ நாளை சந்திக்க உள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்