நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

🕔 May 13, 2019

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு இன்றிரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதியில் இந்த ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

வடமேல் மாகாணத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரையும், கம்பஹா மாவட்டத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணிவரையும் அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்