தலைப்புச் செய்திகள்

48 தங்கக் கட்டிகளுடன், கண்டி வர்த்தகர்கள் மூவர் கைது

தங்கள் கட்டிகளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட  இலங்கையர்கள் மூவர், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 2.4 கிலோகிராம் எடையுடைய 48 தங்கக் கட்டிகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இவற்றின் பெறுமதி 01 கோடியே 43 லட்சத்து 98 ஆயிரத்து 860 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதானவர்கள் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மும்பை நகரிலிருந்து இவர்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர்.