ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம்

🕔 May 8, 2018

னாதிபதியை அமைச்சர் சரத் பொன்சேகா பகிரங்கமாக விமர்சித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் வெளியிலும் கடுமையாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று முன்திம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்தார்.

“நாங்கள் தவறான ஒருவரை ஜனாபதிபதியாகத் தெரிவு செய்து விட்டோம். அதன் காரணமாக இப்போது ஐ.தே.கட்சி வருத்தப்படுகிறது” என்று பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் குறித்து கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பிரதமரிடம் முறையிட்டதாகவும், சரத் பொன்சேகாவின் நடவடிக்கை பிழையானது என்பதனை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் சரத் பொன்சேகா மன்னிப்பு கோருவார் என, அமைச்சர்களிடம் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் ஐக்கிய தேசியக்கட்சி எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்பதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்