நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார

🕔 April 24, 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படுவதை தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளுக்கு தனியானதொரு அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்