புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு
🕔 April 24, 2018

புலிகள் அமைப்பினரின் நிலக்கீழ் பதுங்கு குழியொன்று நேற்று திங்கட்கிழமை பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
நபரொருவர் தனது காணியினை துப்பரவு செய்யும் பொழுது இந்த பதுங்கு குழியைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து காணி உரிமையாளர், அருகில் இருந்த ராணுவ முகாமுக்கு தகவல் வழங்கியதனை அடுத்து, அந்த இடத்துக்கு சென்ற ராணுவத்தினர், அங்கு புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி இருப்பதை உறுதி செய்தனர்.
குறித்த பதுங்கு குழியானது நிலமட்டத்திலிருந்து சுமார் 35 அல்லது 45 அடி கீழ் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

