அரசாங்கத்திலிருந்து விலகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

🕔 April 24, 2018

ரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேரும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, இன்று செவ்வாய்கிழமை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி 16 பேர்  அடங்கிய குழுவிலுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர், அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அந்த குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் லண்டனில் வைத்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் இன்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது, இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்