தலைப்புச் செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தீ விபத்தில் பலி: கண்டியில் துயரம்

ரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலியான சம்பவம் கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் மற்றும் 05 வயதுடைய மகன் ஆகிய மூவரே தீயில் கருகி பலியாகியுள்ளனர்.

குறித்த வீட்டின் அறையினுள் உயிரிழந்தவர்கள் இருந்த போது, அங்கு தீப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.