அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிக்க, சுதந்திரக் கட்சியினர் தீர்மானம்

🕔 April 10, 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், நேற்று நடைபெற்ற போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து மீண்டும் நாளை புதன்கிழமையும் செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 வரையில் செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியனவற்றின் பொதுச் செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள், அமைச்சுப் பதவிகளை துறக்க வேண்டுமெனவும் கருத்து வெளியிடப்பட்டது.

எனினும், அவ்வாறு அமைச்சுப் பதவிகளைத் துறக்கத் தேவையில்லை என்று, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்