பதவி விலகுங்கள்; பிரதமரிடம் அமைச்சர் நிமல் கோரிக்கை

🕔 April 3, 2018

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டுமென, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை, பிரமரிடம் அமைச்சர் நிமல்  சிறிபால டீ சில்வா தெரியப்படுத்தியுள்ளார் என்று, அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு கோருவதென சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானமொன்றினை மேற்கொண்டனர். ஜனாதிபதியுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பொன்றினை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலையும் இன்று காலையும் ஜனாதிபதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசரமாக சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்