பிரமருக்கு எதிராக வாக்களிப்போம்: ஐ.தே.கட்சி பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார

🕔 March 26, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், தான்  உட்பட 27 பேர் கையொப்பமிடவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புக்களில் ஏப்ரல் 04 ஆம் திகதிக்கு முன்னர், இடம்பெறவில்லையென்றால், இவ்வாறு பிரதமருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“பிரமருக்கு எதிரரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக எதிர்வரும் 04 ஆம் வாக்களிப்போம். அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விடுவோம்.

அரசாங்கத்துக்கு எதிராக நான் வாக்களிக்க வில்லை. உறுதியான ஐக்கிய தேசியக் கட்சியை கொண்டுவருவதே எனது நோக்கம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments