மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு

🕔 March 23, 2018

டைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது கையாளப்பட்ட தேர்தல் முறை குறித்து மீளாய்வு செய்வதன் ஊடாக, தேர்தல் முறையில் புதிய திருத்தங்களை உருவாக்கலாம். புதிய தேர்தல் திருத்தச் சட்டம் காரணமாக ஏராளமான உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் நிலையற்ற தன்மை காணப்படுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலுக்கு முன்னதாக, தற்போதுள்ள தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான தீர்மானங்களை நாடாளுமன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்