வட்ஸ்ஸப் மீதான தடை, நள்ளிரவு நீங்குகிறது

🕔 March 14, 2018

ட்ஸ்ஸப் மீதான தடை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நீக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்ரின் பெனாண்டோ இதனைக் கூறியுள்ளார்.

நேற்று நள்ளிரவு வைபர் மீதான தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சமூக வலைத்தளங்களை இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தது.

இதேவேளை, பேஸ்புக் மீதான தடை – வரும் வெள்ளிக்கிழமை நீக்கப்படும் என்று, அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments