புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

🕔 March 14, 2018

பிரித்தானியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (76 வயது) இன்று புதன்கிழமை காலை, லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரின் இல்லத்தில்  மரணமடைந்தார்.

கருந்துளை (black holes) குறித்த ஆய்வில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். உலகப் புகழ்பெற்ற எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியியுள்ளார்.

மிகக்கொடிய நரம்பியல் நோயால் 21ஆவது வயதில் ஸ்டீபன்ஹேக்கிங் பாதிக்கப்பட்டார்.  அதன் காரணமாக கை, கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானார். அப்போது மருத்துவர்கள், ஸ்டீபன் 02 அல்லது 03 வருடங்கள் மட்டுமே வாழ்வார் என்றனர். முதலில் நோயாலும், பின்னர் மன அழுத்தத்துக்கும் உள்ளான ஹாக்கிங், பின்னர் அவற்றினையெல்லாம் உடைத்தெறிந்து முன்னேறினார்.

ஸ்டீபன் ஹாக்கிங்  -கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியராகப் பட்டம் பெற்றார்.

‘வொய்ஸ் சின்த்தசைஸர்’ எனப்படும் பேச்சு உருவாக்கி மூலம், உலகம் முழுவதும் அவர் ஆற்றிய உரைகள் பல லட்சம் மக்களை ஈர்த்தன. எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அவருடைய இலக்காக இருந்தது.

1942ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்போர்டில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார்.

இவர் – கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவர்.

இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு உடையவரான ஹேக்கிங், அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியவற்றில் சிறப்பு ஆய்வாளராக இருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்