விபத்தொன்றில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்ரம, பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறியானி பயணித்த வாகனம் கடுகண்ணாவ பகுதியில், மரமொன்றுடன் மோதியமையின் காரணமாக, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக, கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிணைந்த எதிரணி தரப்பிலிருந்த சிறியாணி, ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அண்மையில் தெரிவித்தமையினை அடுத்து, அவருக்கு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின், ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.



