மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

🕔 January 13, 2018

– மப்றூக் –

ற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாகும் நோக்கம் இருக்கும் என்பதில் தனக்கு எதுவித ஐயமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரசின் தயவிலேயே தற்போதைய ஜனாதிபதி மீண்டுமொரு முறை, ஜனாதிபதி ஆவார் எனவும் ரஊப் ஹக்கீம் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளை, மாற்றுக் கட்சியினரும், முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகிச் சென்றவர்களும் தன்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் மு.காங்கிரசின் தலைவர் இங்கு கருத்துக் கூறினார்.

“நோர்வேயிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.  முஸ்லிம் சமூகத்தை டயஸ்போராவுக்கு விலை பேசுவதாகச் சொல்கிறார்கள். இது வழமையாக சொல்லப்படும், புளித்துப் போன விடயமாகும்.

முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து போனவர்களும், இதை இப்போது பேசுகின்றார்கள். முன்னர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துப் பேசியவர்கள், இப்போது ஆதரவாக  பேசுகின்றனர். இது அதாஉல்லா பாடும் பல்லவியாகும். அதை, மு.கா.விலிருந்து பிரிந்து போனவர்கள் இரவல் வாங்கியுள்ளனர்” என்றார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்