விளிக்காத சாணக்கியமும், கடுப்பான கிழக்குச் சுகாதாரமும்

🕔 January 10, 2018

– மரைக்கார் –

நிந்தவூரில் ‘அலியா’வில் போட்டியிடும் ஆட்களை ஆதரித்து சில நாட்களுக்கு முன்னர் பெரிய கூட்டமொன்று நடந்தது.

அதில் சாணக்கியம்தான் பிரதம அதிதியாகப் பங்கேற்றிருந்தார். வழமையாக நீண்ட உரையாற்றும் சாணக்கியம் அன்றைய தினம், தனது உரையினை பெரிதாக நீட்டவில்லை.

அதுமட்டுமல்ல, சாணக்கியம் தனது உரையினை ஆரம்பிக்கும் போது மேடையில் இருந்த, முன்னாள் கிழக்குச் சுகாதாரத்தை விளிக்கவுமில்லை.

சாணக்கியம் இதை வேண்டுமென்றே செய்ததா, அல்லது தவறுதலாக நிகழ்ந்ததா என்று நமக்குத் தெரியாது.

ஆனாலும், தனது பெயரை சாணக்கியம் விளிக்காததால், கடுப்பான முன்னாள் கிழக்குச் சுகாதாரம், முகத்தைச் சுருட்டிக் கொண்டு மேடையை விட்டு இறங்கிச் சென்று விட்டதாம்.

ஆனால் ஒன்று, கட்சிக்குள் இருப்போரை சாணக்கியம் வெட்டத் தொடங்குவது, இப்படி புறக்கணிப்பின் மூலமாகத்தான் என்பதை, உள்ளே இருப்பவர்கள் நன்கு அறிவார்கள்.

இது இப்படியிருக்க, முன்னாள் கிழக்குச் சுகாதாரம் கோபித்துக் கொண்டு போன கதை, சாணக்கியத்தின் காதுகளுக்கு வந்திருக்கிறது.

அதன்போது சாணக்கியம் சொன்னதுதான் ஹைலைட்டான விடயமாகும்.

“எல்லோரும் என்னை உரசிப் பார்த்து விட்டார்கள், இப்போது இவர் உரசிப் பார்க்கிறாரா” என்று சொன்னதாம் சாணக்கியம்.

இந்த இடத்தில் ஒன்றை மட்டும், முன்னாள் கிழக்குச் சுகாதாரத்துக்கு சொல்ல முடியும். “கவனம் காக்கா”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்