கல்முனை கடற்கரை வீதி புனரமைப்பு வேலையை, ஆரம்பித்து வைத்தார் பிரதியமைச்சர் ஹரீஸ்

🕔 January 6, 2018
– அகமட் எஸ். முகைடீன் –

ல்முனை மத்திய கடற்கரை வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை கல்முனை றஹ்மானியா தைக்கா அருகாமையில் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி புனரமைக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, குறித்த வேலைத்திட்டத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஊரின் நடுப்பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை மத்திய கடற்கரை வீதியானது, வடக்கு தெற்காக உள்ள எல்லைகளை இணைக்கின்ற பிரதான வீதியாக உள்ளது.

இவ்வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மழைகாலத்தில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இவ்வீதியில் போக்குவரத்தை மேற்கொள்ளும் பொதுமக்கள்  மிகுந்த அசௌகரிகங்களை எதிர்நோக்குவது தொடர்பில், பிரதேச மக்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Comments