நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம்

🕔 January 3, 2018

நாட்டில் கடந்த வருடம் 332.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி 990 கோடி ரூபாயாகும். போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் இவற்றினைக் கைப்பற்றியிருந்தனர்.

மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் 29,690 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 36 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த வருடம் 4990 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், இதன் பெறுமதி 09 கோடியே 98 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பில் 51,870 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், 220 கிலோ 650 கிலோகிராம் கொகெய்ன் போதைப் பொருள் கடந்த வருடம் கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடர்பில் 29 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கொகெய்ன் போதைப் பொருளின் பெறுமதி 4.4 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 38 கிலோ 170 கிராம் ஹசீஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருந்தன. இதன் பெறுமதி 07 லட்சத்து 63 ஆயிரம் ரூபாவாகும். இது தொடர்பில் 35 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்