பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம்

🕔 December 26, 2017

பெண்களைக் கொண்டு முற்று முழுதாக நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை மாவட்ட மட்டத்தில் நிறுவுவதற்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு பெண்களைக் கொண்டு நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுகின்றமை, இலங்கையில் இதுவே முதல் தடவையாகும்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலின் போது நிறுவப்படும், இவ்வாறான வாக்களிப்பு நிலையங்களில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை, அனைவரும் பெண்களாகவே இருப்பர்.

குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பாக பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதோடு, பெண் பொலிஸார் மூலமாகவே ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

பெண்களால் நிருவகிக்கப்படும் இவ்வாறான வாக்களிப்பு நிலையங்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 02 முதல் 05 வரையில் நிறுவப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்துக்காக பெண் பொலிஸாரை வழங்குமாறு, தேர்தலுக்கான சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம், தேர்தல் ஆணையாளர் விடுத்த வேண்டுகோளுக்கு, அனுமதி கிடைத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்