மஹிந்தவை, கை விட மாட்டேன்: கெஹலிய உறுதி

🕔 December 26, 2017

ஹிந்த ராஜபக்ஷவை, தான் கை விடப்போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹரிசன், அண்மையில் அனுராதபுரத்தில் வைத்து தெரிவித்த கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்குத் தயாராக உள்ளார் என்று, அமைச்சர் ஹரிசன் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை, தான் கைவிடப் போவதில்லை என்று, ரம்புக்வெல குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன அண்மையில் கூறுகையில்; சுதந்திரக் கட்சியுடன் 51 அரசியல் கட்சிகள் இணைவதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்