பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார்

🕔 December 18, 2017

ள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணை்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஏற்கனவே, 93 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய 248 சபைகளுக்கும் இன்று தொடக்கம் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் அச்சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நிறைவடையும்.

Comments