93 உள்ளுராட்சி சபைகளுக்கும், கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு

🕔 December 13, 2017

ற்கனவே அறிவிக்கப்பட்ட 93 உள்ளுராட்சி சபைத் தேர்தல்களிலும் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன்கிழமை நண்பகலுடன் நிறைவடைகிறது.

அதேவேளை, குறித்த உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் பொருட்டு,  வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை நாளை நண்பகல் 12.00 மணியுடன் முடிவுறுகிறது.

இதனையடுத்து, தேர்தல் நடைபெறும் தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை, ஏனைய உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்