சிறுவர் துஷ்பிரயோகத்தில், கொழும்பு முதலிடம்

🕔 December 13, 2017

சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள், இவ்வருடம் கொழும்பு மாவட்டத்தில் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார்.

1232 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் 925, குருணாகல 647, களுத்துறை 550, காலி 546, ரத்னபுரி 490, மட்டக்களப்பு 170, முல்லைத்தீவு 125, வவுனியா 122 மற்றும் கிளிநொச்சி 117 எனும் கணக்கில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் பதிவாகியுள்ளன.

இதற்கிணங்க இந்த வருடம் மேற்படி அதிகார சபைக்கு 8548 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவற்றில் 2037 முறைப்பாடுகள் – சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டவையாகும். 481 முறைப்பாடுகள் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளாகும். 284 முறைப்பாடுகள் பாலியல் வண்புனர்வு முறைப்பாடுகளாகும். மேலும், சிறுவர் தொழிலாளர் பற்றிய முறைப்பாடுகள் 246 ஆகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்