வேட்பாளர்ளை தெரிவு செய்வதில், மு.கா. முக்கியஸ்தர்களிடையே அடிபிடி; அட்டாளைச்சேனையில் வன்முறை ஆரம்பம்

🕔 December 13, 2017

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் பொருட்டு, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் நடத்திய இறுதிக் கட்ட கூட்டமொன்றில், அடிபிடி இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று செவ்வாய்கிழமை இரவு நடந்த இந்தச் சண்டையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மு.காங்கிரஸ் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பாரிய பிரச்சினைகளும், இழுபறிகளும் ஏற்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் மு.கா. சார்பாக தமக்கு போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்த பலருக்கு, தற்போது கழுத்தறுப்பு இடம்பெற்றுள்ளது.

இதனால், வேட்பாளர் கனவில் மிதந்து கொண்டிருந்த பலர் தற்போது ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இன்னொருபுறம், அட்டாளைச்சேனைக்கு மு.கா. தலைவர் வாக்களித்தபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்காமல் ஏமாற்றி வருகின்றமையினால், கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் முடிவில்  மு.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலர் உள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்