தலைப்புச் செய்திகள்

ஈரான் – ஈராக் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: ஈரானில் மட்டும் 100 பேர் பலி, 1000 பேர் காயம்

ஈரான் – ஈராக் நாடுகளின் எல்லையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக ஆகக்குறைந்தது 100 பேர் வரையில் ஈரானில் உயிரிழந்துள்ளனர் என்று ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் 1000 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அந்த நாட்டு செய்திகள் கூறுகின்றன.

7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஈராக்கின் கிழக்கு பகுதியிலுள்ள டர்பன்டிகான் நகரில் நான்கு பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளனர் எனவும் ஈராக்கின் சுலைமானியா பகுதி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஈராக் வடக்கு பக்தாத்திலிருந்து சுமார் 350 கிலோமீற்றர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

பாகிஸ்தான், லெபனான், குவைத் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக, அந்த நாடுகளிலுள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.