கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு

🕔 November 12, 2017

கேரள கஞ்சா கடத்திய மதுவரி (கலால்) திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார்.

கலால் திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் கடமையாற்றும் மேற்படி நபர், கல்முனையைச் சேர்ந்தவராவார்.

25 வயதுடைய மேற்படி சந்தேக நபரை, மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

இவரிடமிருந்து 775 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்செய்யப்படவிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்