அதிரக் காத்திருக்கிறது அக்கரைப்பற்று அரசியல்; குதிரை, மரத்திலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர், மயிலுடன் இணைகின்றனர்

🕔 November 13, 2017

– அஹமட் –

தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த அக்கரைப்பற்று முக்கியஸ்தர்கள் இருவர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையவுள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று பிரமுகர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொள்வதற்கான இறுதிக் கட்ட செயற்பாடுகள் நிறைவுற்றதாக தெரிய வருகிறது.

இணைவினையடுத்து, மேற்படி நபர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் எனவும் நம்பப்படுகிறது.

இதேவேளை, தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தருடனான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும், அவர் விரைவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி இருவரும், கடந்த காலங்களில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களமிறங்கியதன் மூலம், தேசிய காங்கிரசுக்கு பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தேசிய காங்கிரசின் கோட்டையாகக் கூறப்படும் அக்கரைப்பற்றிலிருந்து, இரண்டு முக்கியஸ்தர்களை மக்கள் காங்கிரஸ் தனது பக்கம் ஈர்த்துக் கொண்டு, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்