வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை: அமைச்சர் நிமல்

🕔 October 31, 2017

டக்கு – கிழக்கு இணைப்புக்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அரசிலமப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, அதிகாரங்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்ததாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடும் அதுதான் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போதுள்ள அரசியலமைப்பின் முதல் 09 உறுப்புரைகளிலும் எதுவித மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அதன் மூலம் நாட்டின் ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை ஆகியவை பாதுகாக்கப்படுதல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மாகாண சபைகளின் அதிகாரங்களை ஆளுநர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும் எனும் கோரிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் சில்வா தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்