ஹசனலியின் சகோதரர், ஜப்பார் அலி காலமானார்

🕔 October 12, 2017

– முன்ஸிப் –

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஆசிரியருமான எம்.ரி. ஜப்பார் அலி நேற்று புதன்கிழமை இரவு காலமானார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயமடைந்த ஜப்பார் அலி, திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது.

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலியின் இளைய சகோதரரான இவர், முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட அங்கத்தவரும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினருமாவார்.

தனது சொந்த இடமான நிந்தவூரிலிருந்து, சொந்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நேற்று புதன்கிழமை மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற விபத்தில் ஜப்பார் அலி பலத்த காயமடைந்தார்.

அன்னாருக்கு மேலான சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

தொடர்பான செய்தி: முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்