அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி

🕔 September 15, 2017

– அஹமட் –

‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தோற்கடித்து, வடக்குடன் கிழக்கை இணைக்கும் சூழ்ச்சியை முறியடிப்போம்’ எனும் கோசத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று வெள்ளிக்கிழமை  அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை அடுத்து, ஒவ்வொரு பிரதேசத்திலும் நடைபெற்ற இந்த பேரணியில் கணிசமானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கு மாகாணத்தில் ஆதரவு தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன. மேலும், 20ஆவது திருத்தத்தினை ஆதரித்த முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராகவும் பேரணியில் கலந்து கொண்டோர் சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்குபற்றினர்.

அக்கரைப்பற்றில் நடைபெற்ற பேரணியில் தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்