நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது

🕔 September 13, 2017

நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய நகைகளை கடத்த முயன்ற 40 வயதுடைய பெண் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டார்.

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இவரிடமிருந்து சுமார் 7.8 கிலோகிராம் நகைகள் கைப்பற்றப்பட்டதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

மேற்படி நகைகளை 08 பக்கட்களில் அடைத்து, அவற்றினை பட்டியொன்றில் வைத்து, குறித்த பெண் – இடுப்பில் கட்டி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் அடிக்கடி துபாய் சென்று வருபவர் என்றும், இதனைத் தொழிலாகச் செய்பவர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்