கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

🕔 August 11, 2017

– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களிலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருட்களும், குப்பைகளும் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், அதனை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனையில் மக்கள் வங்கிக் கிளை அமைந்திருக்கும் இடத்துக்கு முன்னாலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருள்கள் காணப்படுவதோடு , நீரும் தேங்கியுள்ளமையினால், நுளம்புகள் பெருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆயினும், அட்டாளைச்சேனை பிரதேச சபை, இந்த வடிகான்களை சுத்தப்படுத்தும் விடயத்தில் அக்கறை காட்டவில்லை.

இதேவேளை, மேற்படி வடிகான்களுக்கு மிக நீண்ட காலமாக மூடிகள் இடப்படாமல் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடிகான்களுக்கு மூடிகளை இட வேண்டிய, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலத்துக்கு, இது தொடர்பில் பல தடவை ஊடகங்கள் சுட்டிக் காட்டியிருந்த போதும், அவர்கள் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.

எது எவ்வாறாயினும், தற்போது இப் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், முதலில் இங்குள்ள வடிகான்களை துப்புரவு செய்யும் நடவடிக்கைகளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்