தலைப்புச் செய்திகள்

சஊதி அரேபியாவிருந்து நாடு திரும்பியவர், விமான நிலையத்தில் மரணம்

ஊதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய அப்துல் வாஹித் எனும் நபர், இன்று புதன்கிழமை காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் மரணமடைந்தார்.

கண்டி – தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

திடீர் மாரடைப்புக் காரணமாக, மரணம் சம்பவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இவர் சஊதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்தவர் எனவும், தனது மனைவியை ஜித்தாவுக்கு அழைத்துச் செல்வதற்காக நாடு திரும்பிய போதே, இந்த மரணம் சம்பவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.