கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்; அரசாங்கத்தின் தந்திரம், அரசியல் அரங்கில் அம்பலம்

🕔 July 18, 2017

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படலாம்  என்று, அரசியல் அரங்கில் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் ஆட்சிக்காலங்களே இவ்வாறு முடிவுக்கு வரவுள்ளன.

இந்த நிலையில், மூன்று சபைகளுக்குமான தேர்தல் வேட்புமனுக்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை, ஒக்டோபர் 02ஆம் திகதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக, ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆயினும், மேற்படி மூன்று சபைகளுக்குமான தேர்தல்களை பிற்போடும் நடவடிக்கைகளை மிகவும் தந்திரோபாயமாக அரசாங்கம் மேற்கொள்ளலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மாகணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்கள் பட்டியலிலும், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 30 வீதமாக அமைய வேண்டுமென, தற்போது அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில், வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறானதொரு வழக்கை – தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவுத் தரப்பினரே தாக்கல் செய்யக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுறது.

எனவே, தேர்தல் தொடர்பான விடயமொன்றினைத் தீர்மானிக்கும் வழக்கு, நீதிமன்றில் உள்ளது எனக்கூறி, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் அரசாங்கம் ஒத்தி வைக்கலாம் என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் வெளியிடப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல்களை, தற்போதைய அரசாங்கத்துக்கு எதிர்கொள்ளும் திராணி இல்லாமையினாலேயே, இவ்வாறானதொரு செயற்பாட்டில் ஆட்சியாளர்கள் ஈடுபடலாம் எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்