தலைப்புச் செய்திகள்

கெக்குனுகொல்ல மாணவர்கள் மூதூரில் மரணம்; மாவிலாறு பலி கொண்டது

– பாறூக் முபாறக் –

குருநாகல் – கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெக்குனுகொல்ல – அரக்கியால பகுதியைச்சேர்ந்த எம்.என்.எம். அப்துல்லாஹ் (11 வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது) ஆகியோராவார்.

இவர்கள் மூதூரில் திருமண வீடொன்றிற்கு வருகை தந்த நிலையில், மாவிலாறு குளத்தை பார்வையிட சென்று, தோணியில் பயணித்ததாகவும் அதன்போது, தோணி கவிழ்ந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவருகின்றது.

உயிரிழந்த இரண்டு மாணவர்களின் ஜனாஸாக்களும் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளன.

விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.