கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல்

🕔 July 14, 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனது தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவின் கல்லறையை நிர்மாணிப்பதற்காக, அரச பணத்தினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கமைய இந்த கைது இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது

கோட்டாவை கைது செய்வதில், பிரபல அமைச்சர்கள் இருவர் நேரடியாக தலையிட்டுள்ளனர் எனவும், சட்டமா அதிபர் திணைக்களமும் கோட்டாவின் கைதுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதேவேளை, ஜனாதிபதி தலைமையில் கடந்த புதன்கிழமை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற றுப்பினர்களின் சந்திப்பு இடம்பெற்றபோது, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறிய முடிகிறது.

இதன்போது, கோட்டாபய ராஜபக்ஷழவ கைது செய்தால், பாரிய அரசியல் கொந்தளிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்ததாகவும், ராஜபக்ஷவினருக்கு பாரிய மக்கள் பலம், இன்னமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்