சீனி ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கிறது: வயிற்றில் அடிக்கிறார் மங்கள

🕔 June 6, 2017

சீனிக்கான இறக்குமதி வரி இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி, 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் நிதி தெரிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சீனி உள்ளிட்ட பல்வேறு நாளாந்தப் பாவனைப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது.

எவ்வாறாயினும், அவ்வாறு விலை குறைக்கப்பட்ட பொருட்களுக்கு, நல்லாட்சியாளர்களே விலைகளை அதிகரித்துக் கொண்டு செல்கின்றமை மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியினை ஏற்படுத்தி வருகிறது.

இதேவேளை, நிதியமைச்சினை மங்கள சமரவீர பொறுப்பெடுத்துக் கொண்டமையினை அடுத்து, அத்தியவசியப் பொருளொன்றுக்கு இவ்வாறு அதிகளவு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்