நாடாளுமன்ற உறுப்பினர் தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு

🕔 March 20, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு,  பிடி விறாந்து பிறப்பித்து இன்று திங்கட்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின் நிமித்தம் நீதிமன்றுக்கு சமூகம் தராமையினை அடுத்தே, அவருக்கு எதிராக பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டது.

பொல்ஹென்கொட அலன் மதினியாராம விகாரையில் காலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையில் ஒலிபெருக்கி ஊடாக அதிக சத்தத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை, இன்று கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் எடுக்கப்பட்டது.

மேற்படி விகாரைக்கு அருகில் வசிக்கும் நான்கு பேர், குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தனர். விகாரையின் ஒலிபெருக்கி ஏற்படுத்தும் அதிக சத்தம் தங்களுக்கு பிரச்சினையாக உள்ளது என்று முறைப்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணைக்காக தேரர் அழைக்கப்பட்டிருந்தும், அவர் இன்றைய தினம் வருகை தரவில்லை.

இதனையடுத்து அவரைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்