அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று நினைக்கிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல

🕔 January 23, 2017

Keheliya - 086ரசியலில் ஈடுபட்டமை போதும் என்று தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை கூறினார்.

நுகேகொடையில், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறும் கூட்டம் சம்பந்தமான விடயங்களை தெளிவுப்படுத்தும் வகையில், இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இருபது வருடங்களுக்கும் மேலாக, அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று தான் நினைத்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் கெடுதியான செயற்பாடுகள் காரணமாக அரசியலில் இருந்து விலக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை, முகத்தை பார்த்து சிரிக்கவில்லை, கிளைக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என மக்கள் தற்போது என் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தலைமைகளை மாற்றும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது பற்றி கூற முடியாத விடயங்கள் உள்ளன எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்