அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம்

🕔 January 22, 2017


ATM - Thief- - 0876
ரச வங்கியொன்றில் 57 லட்சம் ரூபாவினை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிபில – மெதகம பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலேயே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

ஏ.ரி.எம். இயந்திரத்துக்காக இடப்பட்டிருந்த பணத்தொகையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை 20ஆம் திகதியன்று ஏ.ரி.எம். இயந்திரத்துக்குரிய பணத்தை, வங்கி முகாமையாளர் நிரப்பி விட்டுச் சென்ற நிலையிலேயே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

வங்கிக்கு அருகிலுள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராவில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் –  ஏ.ரி.எம். அறையினை உறைப்பதற்கு முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்த நிலையில், அது குறித்து கடை உரிமையாளர், வங்கி முகாமையாளருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து வங்கிக்கு இன்று விரைந்த முகாமையாளர், அங்கு பணம் கொள்ளையிடப்பட்டிருப்பதைக் கண்டறித்தார்.

ஏ.ரி.எம். அறையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவின் செயற்பாட்டினை துண்டித்துள்ள கொள்ளையர்கள், ஒளிப்பதிவுக் காட்சிகளையும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகிறது.

Comments