கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை

🕔 November 2, 2016

Thandayuthapaani - 01கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டமையானது பாரிய பிரச்சினையை தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் முகமாக குறித்த ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாணத்திலேயே நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

நாளைய தினம் நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொள்ள வருகின்றவர்கள், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களின்படி-  குறித்த பாடசாலைகளில் தாம் கடமையேற்கவில்லை என்ற கடிதத்தையும், பழைய நியமனக் கடிதத்தையும் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆவணங்களை ஏற்கெனவே கல்வியமைச்சில் சமர்ப்பித்தவர்களுக்கு, இதற்கான அவசியம் ஏற்படாதென்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்