பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர, அமைச்சரவை அங்கீகாரம்

🕔 October 12, 2016

Ranil - 013நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போது, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கான அங்கீகாரத்தை அமைச்சரைவ வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த மேற்படி சட்டமூல வரைபினை சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்து, அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகம் செய்யும் நோக்கில், கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பை வரைவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதனடிப்படையில், அக் குழு தனது நடவடிக்கையினைப் பூர்த்தி செய்து, தயாரித்த உத்தேச கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பின் வரைபினையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்